• Apr 09 2026

சக்திவேலின் முடிவால் கடும்கோபத்தில் முத்துவேல்.! மயில் கர்ப்பத்தால் சந்தோசப்படும் சரவணன்..

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, காந்திமதி கதிரையும் ராஜியையும் பார்த்து இப்பவும் ரெண்டு பேரும் சண்டை பிடிச்சுக் கொண்டு இருக்கிறீங்களா என்று கேட்கிறார். அதுக்கு கதிர் இப்பவெல்லாம் நாங்க சண்டை போடுறேல என்கிறார். அதனை அடுத்து காந்திமதி பாண்டியன் கிட்ட கடையை பற்றிக் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார். பின் பாண்டியன் காந்திமதி கிட்ட வீடு வசதியா இருக்கா என்று கேட்கிறார்.

அதுக்கு காந்திமதி ஒரு குறையும் இல்ல என்கிறார். மறுபக்கம் சக்திவேல் குமாரைப் பார்த்து உன்னோட அப்பத்தா இப்படி ஒரு அநியாயத்தை பண்ணுவாங்க என்று கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல என்கிறார். அதைக் கேட்ட குமார் என்ன இருந்தாலும் நீங்க அப்பத்தாவ வீட்டை விட்டு அனுப்பி இருக்கக் கூடாது என்கிறார். 


அதுக்கு சக்திவேல் பாராட்டி பத்திரம் கொடுக்கவா என்று சொல்லிப் பேசுறார். அந்த நேரம் பார்த்து முத்துவேல் அங்க வந்து சக்திவேல் அம்மாவை வெளியில அனுப்பும் வரைக்கும் பார்த்திட்டு சும்மா இருந்தியா என்று சொல்லி வடிவைப் பேசுறார். அதனை அடுத்து சக்திவேல் வடிவைப் பார்த்து அண்ணனுக்கு போன் பண்ணி நடந்ததெல்லாத்தையும் சொல்லிட்டீங்களா என்று கேட்கிறார்.

பின் சக்திவேல் நடந்ததெல்லாத்தையும் முத்துவேல் கிட்ட சொல்லுறார். அதனை அடுத்து முத்துவேல் காந்திமதியை வீட்ட வரச்சொல்லுறார். அதைக் கேட்ட காந்திமதி நான் என் பொண்ணு கூட இருக்கிறேன் என்கிறார். அதனை அடுத்து மயில், சரவணன் கிட்ட கர்ப்பமா இருக்கிறதை சொன்ன உடனே... சரவணன் சந்தோசப்படுற மாதிரி கனவு காணுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement