• Mar 04 2026

அடுத்த சமந்தா ராஷ்மிகா தான்.. கொளுத்திப் போட்ட பயில்வான்.! காரணம் என்ன தெரியுமா.?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிரபலங்களான நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தானா ஆகியோரின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுடைய திருமண வரவேற்பு பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக தடபுடலாக பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டதோடு, திருமண தம்பதியினரும் தங்களுடைய திருமணத்தை முன்னிட்டு பல ஏழை எளிய மக்களுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

திருமணத்திற்கு பின்பும் ராஷ்மிகா நடிக்க உள்ளார். அவருடைய கைவசம் தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் உள்ளன.

இந்த நிலையில், பிரபல பத்திரிகை விமர்சகரும் சினிமா நடிகருமான பயில்வான் ரங்கநாதன், “அடுத்த சமந்தா ராஷ்மிகா மந்தானாதான்” என பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


அதன்படி அவர் கூறுகையில், ராஷ்மிகா மந்தானா விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துள்ளார். இதற்குப் பின்பு அவர் நடிக்க உள்ள படங்கள் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டியவை ஆகவே உள்ளன.


ஏற்கனவே சமந்தா, நாகார்ஜுனா குடும்பத்தில் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு நடிப்பது நாகார்ஜுனா குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பிளவுகள் காரணமாகவே அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

அதேபோல் ராஷ்மிகா திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடிக்க உள்ளார். அதிலும் அவர் ஓரினச்சேர்க்கை பற்றிய கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய் தேவரகொண்டாவுக்கு உடன்பாடானதா என்பது தெரியவில்லை. கல்யாணம் ஆன பிறகு ஒரு ஹவுஸ்வைஃப் எப்படிப்பட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டார்களா ராஷ்மிகா.

திருமணத்துக்கு பிறகு இப்படியான ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்தால், விஜய் தேவரகொண்டாவின் குடும்பம் என்ன நினைப்பார்கள்? பெயரில் தப்பு இல்லை, ஆனால் கதை ஹோமோசெக்ஸ்யுவல் (ஓரினச்சேர்க்கையாளர்) கதையம்சம் கொண்டது. இந்தக் கதையை ஏன் தேர்ந்தெடுத்தார் என தெரியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement