• May 08 2026

மயிலின் முகத்தில் கரியைப் பூசிய சரவணன்.. காந்திமதிக்கு தெரியவந்த உண்மை.! டுடே எபிசொட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனாவுக்கு மயில் போன் எடுத்து கர்ப்பமாக இருப்பதை சரவணன் கிட்ட கோவிலில வைச்சு சொல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் என்கிறார். மேலும், மாமா என்னோட கதைக்கிறார் இல்ல நீ அவரை அம்மன் கோவிலுக்கு வரச் சொல்லிவிடுவியா என்று கேட்கிறார். அதுக்கு மீனாவும் சம்மதிக்கிறார். 

அதனை அடுத்து கோமதி அரசியை பார்த்து வீட்டில மளிகை சாமான் தீர்ந்திட்டு லிஸ்ட் இருக்கு வரும் போது கொண்டு வரச்சொல்லி பாண்டியன் கிட்ட சொல்லு என்கிறார். அதைப் பார்த்த காந்திமதி உங்க மாமாவும் அத்தையும் கதைக்கிறேலயா என்று ராஜி கிட்ட கேட்கிறார். அதுக்கு ராஜியும் கதைக்கிறேல என்கிறார். பின் காந்திமதி கோமதியைப் பார்த்து நீயும் மாப்பிள்ளையும் பேசுறது இல்லயா என்று கேட்கிறார். அதுக்கு கோமதியும் நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார்.


மறுபக்கம் மீனா சரவணனுக்கு போன் எடுத்து நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் கோவிலுக்கு வர முடியுமா? என்று கேட்க, சரவணனும் அதற்கு சம்மதிக்கிறார். அதனை அடுத்து மீனா மயிலுக்கு சரவணன் கோவிலுக்கு வந்திடுவார் என்ற விஷயத்தை சொல்லுறார். பின் கோவிலுக்குப் போன சரவணன் மயிலைப் பார்த்த உடனே கோபப்படுறார். 

பின் மயில் சரவணன் கிட்ட நான் சொல்லித் தான் மீனா உங்கள வரச்சொன்னா என்கிறார். அதைக் கேட்ட சரவணன் பொய் சொல்லுறது, நாடகம் போடுறதை இப்ப வரைக்கும் நிப்பாட்டவே இல்லயா என்று கேட்கிறார். அதனை அடுத்து மயில், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட சரவணன் அது என்னோட குழந்தை இல்ல என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement