• Mar 26 2026

எதிர்பார்ப்பை எகிறவைத்த அப்டேட்.! வெளியானது லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் தகவல்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

முன்னணி தொழிலதிபராக அறியப்படும் லெஜெண்ட் சரவணன், தனது முதல் திரைப்படமான "The Legend" மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் “லீடர்” ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் படத்தை துரை செந்தில் குமார் இயக்கி வருகிறார். ஆக்ஷன் மற்றும் சமூக அம்சங்கள் கலந்து உருவாகி வரும் இப்படம், லெஜெண்ட் சரவணனின் திரைப்பயணத்தில் அடுத்த முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் “லீடர்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறுகிய நேரம் கொண்ட அந்த வீடியோவில் லெஜெண்ட் சரவணன் மாஸ் தோற்றத்தில் காட்சியளித்திருந்தார். 

கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியது. குறிப்பாக லெஜெண்ட் சரவணனின் மாறுபட்ட தோற்றம் மற்றும் தீவிரமான வசனங்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறின. இதனால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், “லீடர்” படத்தின் டீசர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement