தமிழ் சினிமாவில் புன்னகை ராணியாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த நடிகை சினேகா, தனது புதிய புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது கவனம் பெற்றுள்ளார். விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள சினேகா, குடும்ப வாழ்க்கையிலும் தொழிலிலும் சமநிலையை பேணி வருபவர் என ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.

2000களில் தொடங்கி தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்த சினேகா, குடும்பம் சார்ந்த கதாபாத்திரங்களில் இருந்து காதல் கதாநாயகி வரை பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்துள்ளார். தனது இயல்பான நடிப்பு மற்றும் புன்னகையால் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினேகா மகிழ்ச்சியாக உள்ளார். நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் சினிமாவிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் சினேகா.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் சினேகா, அடிக்கடி போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். பாரம்பரிய உடைகள் முதல் மாடர்ன் ஸ்டைல் வரை பல்வேறு தோற்றங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.
இந்நிலையில், தனது செல்லப் பிராணி நாய்களுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை சினேகா தற்பொழுது வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.
Listen News!