விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் திவாகர். இவர் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் காமெடி வீடியோக்களை பதிவு செய்து அதன் மூலம் புகழ்பெற்றவர்.
இந்த நிலையில் விஜய்–சங்கீதா விவாகரத்து பிரச்சினை பற்றி பலரும் விவாதங்களை எழுப்பி வரும் நிலையில், தன்னுடைய கருத்தை முன்வைத்துள்ளார் திவாகர். அதன்படி அவர் கூறுகையில், “விஜய்–சங்கீதா குடும்ப பிரச்சினைகளை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. அவங்க புருஷன்–பொண்டாட்டி. இன்று அடிப்பார்கள், நாளை சேர்ந்து இருப்பார்கள்.
இதைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியதை கேட்டு மனசு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. யாருக்குமே என்ன நடந்தது என்று உண்மை தெரியாது. எந்த புரிதலும் இல்லாமல் தப்பாக பேசுறாங்க.

அதேபோல் பாடகி சுசித்ரா பேசினதும் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அவர்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. அவர்கள் இப்படித்தான் ஃபேமஸ் ஆகணும் என்று இல்லை. திரிஷா பற்றியும் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் எவ்வளவு நல்ல விஷயம் செய்திருக்காங்க, ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை
ஒரு விஷயத்தை அரைகுறையாக தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு கண்ணும் காதும் வைத்து தப்பாக பேசுறாங்க.
பிக் பாஸ் ஜூலி கூட போலி விளம்பரத்துக்காகத்தான் விஜய் பற்றி பேசுறாங்க. என்னைப் பற்றியும் ஆயிரம் பேர் நெகட்டிவாக பேசுறாங்க. அதற்காக நான் விஜயை காரணம் காட்டலாமா? அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு நல்லதுதான் பண்ணுறார்.
எல்லோருமே விஜய் வீட்டு மொட்டைமாடியில் இருந்து பார்த்தது போல தப்புத்தப்பாக பேசுறாங்க. தயவு செய்து அரசியலை அரசியலாக பாருங்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள்” என தனது ஆதங்கத்தை முன்வைத்துள்ளார் திவாகர்.
Listen News!