• Mar 08 2026

குட்டி நர்மதா வந்தாச்சு.! அப்பாவான குஷியில் றெக்கை கட்டிப் பறக்கும் ஹரிஷ் கல்யாண்.!

shali / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு நர்மதாவை திருமணம் செய்து கொண்ட ஹரிஷ் கல்யாண், தற்போது தந்தையான மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.


மார்ச் 2ஆம் தேதி தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான உடனே ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இது தொடர்பாக ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், “நானும் என் மனைவி நர்மதாவும் இன்று (மார்ச் 2) எங்கள் பெண் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்ற நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் போது என் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர். 

இந்த அழகான புதிய அத்தியாயத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும் இந்தத் தருணத்தில் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு மிகவும் எளிமையாக இருந்தாலும், ரசிகர்களை உருகச் செய்துள்ளது. 

Advertisement

Advertisement