• Apr 15 2026

துருவ் - அனுபமா டேட்டிங் செய்வது கன்ஃபார்ம் ..!வைரலாகும் இன்ஸ்டா பதிவு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் இருவரும் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்தில் இணைந்து நடித்தனர். அதற்குப் பின்பு அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர்களுக்கு இடையே காதல் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரமின் ஒரே மகன் தான் துருவ் விக்ரம். இவர் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பின்பு தனது அப்பாவுடன் இணைந்து ‘மகான்’ என்ற படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்தில் நடித்தார். அந்த படம் துருவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார். இந்த படத்தில் அவர்கள் நடிக்கும் போதே அவர்களுக்கு இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டது.


எனினும், இது தொடர்பில் அவர்கள் இருவரும் உறுதியாக எந்த தகவலும் அளிக்கவில்லை. சமீபத்தில் துருவ் தாங்கள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அனுபமா அதே படத்தை ஒரு ஹார்ட் குறியீட்டுடன் தனது பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதனால் இவர்களுக்குள் காதல் இருப்பதாக மேலும் பதிவுகள் பகிரத் தொடங்கின.

இந்த நிலையில், துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரனின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகி வருகின்றன. அவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதை கன்ஃபார்ம் பண்ணும் வகையில் குறித்த புகைப்படம் அமைந்துள்ளது.

அதில் துருவ் விக்ரம் “என்னை கண்டுபிடித்தார்” என கேப்ஷன் போட்டுள்ளார். அதே நேரத்தில் “உங்களுடைய கண்கள் மூலம்” என கேப்ஷன் போட்டுள்ளார் அனுபமா. தற்போது இது பலருடைய கவனத்தை ஈர்த்து, இவர்களுக்கு இடையிலான காதல் மேலும் பேசப்படுகிறது.

Advertisement

Advertisement