• Mar 08 2026

சங்கீதாவின் டிவோர்ஸை ஓட்டாக மாற்ற பிளான் போட்டாரா விஜய்..? புட்டு வைத்த பிரபலம்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்று தருமாறு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விஷயம் பொதுவெளியில் லீக் ஆகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக காணப்படும் விஜயை, ரசிகையாக இருந்து காதலித்து திருமணம் செய்தவர் சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 27 ஆண்டுகள் கடந்துள்ளன. இவர்களுக்கு 25 வயதில் ஜான்சன் சஞ்சய் என்ற மகனும், 20 வயதில் திவ்யா ஷாயா என்ற மகளும் உள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு பொதுவெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் கொடுத்த மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தவறான உறவு இருப்பதாகவும், இன்று வரை அந்த நடிகையுடன் அந்த உறவை தொடர்ந்து வருகிறார் எனும் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், சங்கீதாவின் விவாகரத்தை ஓட்டாக மாற்ற விஜய் பிளான் பண்ணுகிறார் என்று சுசித்ரா கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, அவர் விஜயின் ஆதரவாளர் ஒருவர் பேசிய ஆடியோவை வெளியிட்டு, இவற்றிற்கெல்லாம் காரணம் விஜயை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் விவாகரத்து பற்றிய செய்தியை வேண்டுமென்றே லீக் பண்ணினார்கள்.  அவர்களுக்கு இரண்டு பாயிண்ட் மட்டுமே நோக்கம்.  ஒன்று திமுகவுக்கு எதிராக மக்களை தூண்டி விட வேண்டும்.

ஆனால், விஜயின் குழந்தைகளுக்கும் சங்கீதாவுக்கும் எதிராக வரும் கருத்துக்களையும் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் அவர்களை இதில் இழுத்துவிடாமல் இந்த விஷயத்தை கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

அதன்படியே இந்த விடயம் தற்போது திமுகவுக்கு எதிராகவும் சங்கீதாவுக்கு எதிராகவும் புகைந்து கொண்டு வருகிறது. எல்லா யூடியூபர்களுக்கும் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement