• May 08 2026

மீனா விஷயத்தில் முத்துவுக்கு விஜயா போட்ட கண்டிஷன்.. ஸ்ருதி செய்த காரியம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், வீட்டுக்கு வந்த அண்ணாமலை, “மீனா எங்கே?” என்று கேட்கின்றார். அதற்கு எல்லோரும் சமாளிக்க முயற்சிக்கின்றனர். இறுதியில், மீனா அம்மா வீட்டுக்கு போனது தெரிய வருகிறது.

இதனால் விஜயாவை திட்டிய அண்ணாமலை, மீனாவை மீண்டும் கூட்டி வருமாறு முத்துவிடம் கூறுகின்றார். ஆனால், “உன்னுடைய அப்பா மீது உண்மையான பாசம் இருந்தால், மீனாவை அழைத்து வர வேண்டாம்” என்று கண்டிஷன் போடுகின்றார் விஜயா.

அதன் பின்பு, மீனாவின் அம்மா வீட்டுக்கு சென்ற முத்து, மீண்டும் வீட்டுக்கு வருமாறு மீனாவை அழைக்கின்றார். ஆனால் மீனா, “நான் வந்தால் அத்தை என்னை பார்த்து பயப்படுவாங்க. எனக்கும் பயமாக இருக்கிறது. அந்த ஜோசியக்காரி சொல்வது எல்லாம் உண்மையாகி விடுமோ? அதனால் நான் வரவில்லை” என்று சொல்கின்றார்.


பலமுறை கேட்டும் மீனா வர மறுத்ததால், “இதுதான் உன் முடிவா? சரி, ஒரு இரண்டு நாளைக்கு இருந்து விட்டு வா” என கூறி செல்கின்றார் முத்து.

அதற்கு பின்பு வீட்டுக்கு வந்த ஸ்ருதியை பார்த்து சந்தோசப்படுகிறார் விஜயா. மேலும் மீனா வீட்டை விட்டு வெளியே போன பிறகு நல்லது நடப்பதாக நம்புகின்றார். ஆனால் அவர், “நான் மாமாவை  பார்க்கத்தான் வந்தேன்” என்று கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement