• Mar 08 2026

ஒரு கல்ல இரண்டு மாங்காயா..? அமீர் செய்த காரியத்தை பாருங்கள்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பிரியங்கா தேஷ்பாண்டே பணியாற்றி வருகின்றார். இவர் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் உட்பட ஏராளமான ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது பிரபலத்தை மேலும் உயர்த்தினார்.

அதன்படி பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டு ஃபைனல் வரை சென்ற பிரியங்கா, நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார். குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனின் போது பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பவானி மற்றும் அமீர் ஆகியவர்கள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். அதன் பின்னர் இவர்கள் மூவரும் இணை பிரியாதவர்களாக வலம் வருகின்றார்கள்.


கடந்த வருடம் தொகுப்பாளர் பிரியங்கா, வசி என்பவரை காதலித்து கரம் பிடித்தார். அதேபோல் பவானி – அமீர் திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது அமீரும் பவானியும் தங்களுடைய தனிப்பட்ட கேரியர் காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் பிரியங்கா மற்றும் பவானியுடன் அமீர் வீடியோ காலில் பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்களின் நட்பு இன்னும் தொடர்கிறது என்பதை காட்டும் வகையில் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement