• Mar 08 2026

எல்லாரும் சும்மா வெட்டி உதாரு விடலாம்..! திமுக மேடையில் தளபதியை சீண்டிய சத்யராஜ்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  விஜய், சங்கீதாவுக்கு இடையிலான விவாகரத்து பிரச்சினை தான் பேசு பொருளாக  காணப்படுகிறது. இது தொடர்பில் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும்  பல  சர்ச்சை கருத்துக்கள்  வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில், திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. அவரது பேச்சு, நடிகர் விஜய் மீது மறைமுக விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.

அதன்படி அவர் கூறுகையில், டயலாக் பேசுறது வேற மேடை. மேட்டர் இல்லாதவன் கூட டயலாக் பேசி ஈசியா கைத்தட்டு வாங்கிடலாம். ‘என்னம்மா கண்ணு’ன்னு சொன்னா உடனே ஆரவாரம் வரும். இது எல்லாம் வெட்டி உதார். எல்லா நடிகருக்கும் இது செய்ய தெரியும். ஆனால் உண்மையான கொள்கையை பேசுற மேடை இதுதான்.


மேலும், நான் எம்ஜிஆர் ரசிகன் தான். ஆனாலும் ஏன் திமுக மேடையில் நிற்கிறேன் என்பதற்குக் காரணம் இருக்கு. தேர்தல் வரட்டும், செல்போனில் உள்ள சில விஷயங்களை காட்டுறேன் என்றார்.

சத்யராஜின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி, பல்வேறு கருத்துகளை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement