பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை ஜூலி தற்போது தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயையும் அவருடைய ஆதரவாளர்களையும் சீண்டி வருகிறார். ஏற்கனவே ஜல்லிக்கட்டு காளை தொடர்பில் ஜூலி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, “ஆமாங்க, இதுதான் என் 3வது புருஷன்..” என்று பேசியுள்ளார்.
அதன்படி குறித்த வீடியோவில் அவர் கூறுகையில், 'ஹாய் வல்லகர் வாரியர்ஸ், இதுதான் என்னுடைய மூன்றாவது புருஷன்' என அவருடைய கணவரை காட்டியுள்ளார்.

மேலும், எனக்கு இவர் மூன்றாவது புருஷன் தான். ஆனா எனக்கும் இவருக்கும் இப்போதுதான் முதல் முறையாக திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு முன்பு தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் கல்யாணம் நடந்துச்சு. அதற்கு பின்பு அம்மன் தாய் சீரியலில் கல்யாணம் நடந்துச்சு. எனவே எனக்கு இது மூன்றாவது திருமணம் தான் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் நேரத்தில் வேறு எந்த சின்னத்திலாவது ஊதி விட்டு வந்து விடப் போறீங்க. சரியாக மடக்கு ஊதியை பார்த்து ஓட்டு போடுங்க. அப்புறம் உங்க தலைவர் டெபாசிட் கூட வாங்காம போயிடுவார் என்று விஜயை கடுமையாக கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Listen News!