• May 25 2026

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடிக்கும் குழந்தைக்கு சூர்யா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா  நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. 

அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 46-வது படத்துக்கு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.

லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


மேலும் நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா குழந்தையை கையில் சுமந்தபடி நிற்கிறார். மற்றொரு போஸ்டரில் அதே குழந்தையை பாசமாக நோக்கி அமர்ந்திருக்கும் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடிக்கும் குழந்தைக்கு நடிகர் சூர்யா தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement