• May 05 2026

விஜய் டிவிவில் அதிரடி என்ட்ரி கொடுத்த நடிகை அம்பிகா.! எந்த சீரியலில் தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நாயகியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை அம்பிகா. அழகும், சிறந்த நடிப்பின் மூலமும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த அவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகும் சினிமாவை முழுமையாக விட்டு விலகாமல், படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்துவரும் அம்பிகா, தற்போது சிறிய திரையில் புதிய அவதாரத்தில் களம் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி சீரியலில் அம்பிகா வக்கீலாக என்ட்ரி கொடுத்துள்ளார். வக்கீல் வேடத்தில் அவர் தோன்றியுள்ள லுக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


 அதன்படி,இன்றைய எபிசோடில் சிந்துக்கு ஆதரவாக களமிறங்கும் அம்பிகா, இந்த வழக்கில் நீதியை பெற்றுத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

அம்பிகாவின் இந்த அதிரடி என்ட்ரி, தொடரின் திருப்புமுனையாக அமையுமா என்பது இனிவரும் எபிசோட்களில் தெரியவரும்.


Advertisement

Advertisement