பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி தான் கொண்டு போன Gift-ஐ கொடுப்பமோ விடுவமோ என்று யோசிச்சுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த சக்திவேல் அவள் ஏதோ வாங்கிக்கொண்டு வந்திருக்கா என்று வெற்றிவேல் கிட்ட சொல்லுறார். பின் பாட்டி கோமதியை பார்த்து நீயும் என்னோட பொண்ணு தான் எதுக்காக ஒதுங்கி போய் நிற்கிற வா என்கிறார். அதனை அடுத்து கதிரும் கோமதியை போய் பாட்டி கிட்ட பேசச்சொல்லுறார்.

இதனைத் தொடர்ந்து கோமதி பாட்டி கிட்ட போய் இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவில கூட எதிர்பார்க்கல என்கிறார். மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்லிட்டு கொஞ்ச நேரம் ஆனந்தக் கண்ணீர் விடுறார். பின் கோமதி தான் வாங்கிக்கொண்டு வந்த வளையலை பாட்டிக்கு போட்டு விடுறார். அப்ப ராஜியும் வடிவைப் பார்த்து என்கிட்ட பேசமாட்டியா என்று கேட்கிறார்.
அதுக்கு வடிவு அந்தக் குடும்பம் தான் பெரிசு என்று சொல்லிட்டு போன ஆள் தானே நீ அப்புறம் உன்கிட்ட என்ன பேசுறது என்று கேட்கிறார். பின் எல்லாரும் ஒன்னா சேர்ந்து போட்டோ எடுப்போம் என்று பாட்டி சொன்னதைக் கேட்ட சக்திவேல் கோபப்படுறார். அதைப் பார்த்த பாட்டி ஒரு போட்டோ தானே எடுப்போம் என்கிறார்.

அதனை அடுத்து கதிர் பாட்டி தாத்தாவோட சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ பிரேம் செய்து கொடுத்ததைப் பார்த்த பாட்டி சந்தோசத்தில் அழுகிறார். பின் சக்திவேல் கோப்படுறதை பார்த்த வடிவு அத்தையோட சந்தோஷத்துக்காக தன்னும் அமைதியாக இருங்க என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!