• Dec 04 2024

தாக்குதல் நேரம் ஊரடங்கு போடுவாங்க! முகுந்த் 13 வயதில்..! காஷ்மீர் நடிகர் உமைர் பேட்டி

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார்கள். 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியை கொண்டாடியது அமரன் படக்குழு. 


இந்த படத்தில் நடித்த காஷ்மீர் ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் காஷ்மீரை சேர்ந்த உமைர் என்பவரை தமிழ்நாட்டிலேயே தேடி கண்டிபிடித்து படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் தற்போதைய சோசியல் மீடியா டிரெண்ட் இவர்தான்.கோலிவுட்டில் நடிக்கும் முதல் காஷ்மீர் நடிகர்.இந்த விஷயம் எனக்கு அதிகளவில் பெருமையை தேடிக் கொடுத்திருக்கு. இந்த தருணத்தில் நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.


இவ்வளவு பெரிய வரவேற்பு என்னுடைய கதாபாத்திரத்திற்கு கிடைக்குமென நான் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கல. காஷ்மீர் மக்களும் என்னை பாராட்டினார்கள் என்று கூறியுள்ளார்.என்னுடைய 13 வயசுல நான் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றி கேள்விப்பட்டேன். அப்போ எல்லாம் தீவிரவாதிகள் தாக்குதல் நேரம் ஊரடங்கு போட்டு விடுவாங்க. அதன் பிறகு சரியாக எனக்கு 23 வயது இருக்கும்போது `அமரன்' படத்துல நடிக்க கமிட்டானேன்.

d_i_a

படத்துலகூட ஒரு காஷ்மீரியை ராணுவ வீரர் அவருடைய உயர் அதிகாரிகளை தாண்டி வந்து காப்பாற்றியிருப்பார். இந்த மாதிரியான விஷயங்களும் படத்துல இருக்கு. பயோபிக்காக பார்க்கும்போது எனக்கு காட்சிப்படுத்திய விஷயங்களெல்லாம் ஓகேதான். இது தொடர்பான பல கருத்துக்கள் வருகிறது அது எவ்வளவு ஒரு படத்தில் காட்ட முடியுமோ அதனையே அழகாக கட்டியுளார்கள் என்று கூறியுள்ளார்.  






Advertisement

Advertisement