• Jan 19 2025

தனுஷுடன் ஆட்டம் போட்ட அக்ஷயா.. இவ தமிழ்நாட்டு பெண் இல்லையென கிளம்பிய சர்ச்சை வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நெப்போலியன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு தசைச் சிதைவு நோயின் பாதிப்பு காணப்படுகின்றது. இதனாலையே அவரால் சிறுவயதில் இருந்து நடக்க முடியவில்லை. அதன் பின்பு சித்த மருத்துவத்தின் உதவினால் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்தார்.

தனுஷின் மேலதிக சிகிச்சைக்காக இந்தியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு ஐடி கம்பெனி ஒன்றை தொடங்கி கோடி கோடியாய் சம்பாதித்து வரும் நெப்போலியன் அம்பானி போல வாழ்ந்து வருகின்றாராம். அதேபோல விவசாயத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்ட நெப்போலியன் அமெரிக்காவில் விவசாயத்தையும் ஊக்குவித்து வருகிறார்.

d_i_a

இதைத்தொடர்ந்து தனுஷின் திருமணம் நேற்றைய தினம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவர் அக்ஷயா என்ற திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பல கோடிக்களை செலவு செய்துள்ளார் நெப்போலியன்.


நெப்போலியன் மகனின் திருமணத்திற்காக பல ஹாலிவுட் பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்து உள்ளார்கள். அதிலும் குறிப்பாக ராதிகா, மீனா, குஷ்பூ, கலா மாஸ்டர், சரத்குமார், கார்த்தி, பாண்டியராஜன் என பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள்.


இந்த நிலையில், தனுஷ் அக்ஷயாவின் ஹல்தி கொண்டாட்டத்தின் போது இருவரும் க்யூட்டாக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்து பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

எனினும் சில பேர் அக்ஷயா பணத்துக்காக தான் தனுஷை திருமணம் செய்து கொண்டார் எனவும், அவருடைய அப்பா அம்மாவின் இயலாமையை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்கள். அது மட்டும் இன்றி அக்ஷயா தமிழ்நாட்டு பெண் போலவே இல்லை. அவர் பணத்துக்காக பொய்யாக சிரிக்கின்றார் என்று எகதப்பட்ட கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement