• Feb 22 2025

"கசமுசா காட்சிகள்.. என் மனைவி முறைக்க ஆரம்பிச்சிட்டா..." நடிகர் ஜீவா பேச்சு..!

Mathumitha / 14 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஜீவா முன்னர் பெண்களின் மனதை கொள்ளை அடித்த இவரிற்கு தற்போது படவாய்ப்புகள் அதிகம் வருவதில்லை கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய யாத்ரா 2 எனும் படம் அதிக வரவேற்பின்றி தோல்வியடைந்தது.


தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து ராஷி கண்ணா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பட ப்ரோமோஷன்களில் மிகவும் பிஸியாக இருக்கும் இவர் நேர்காணல்களில் தனது பழைய படங்கள் குறித்து பேசியுள்ளார்.


அவர் சமீபத்தில் தனது சிவா மனசில சக்தி படத்தில் நடித்த போது நடைபெற்ற விடயம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். அவர் "எனக்கு கல்யாணம் ஆன டைம்ல சிவா மனசுல சக்தி படத்துல அனுயாவுடன் நடித்தேன். அப்போது சில கசமுசா காட்சிகள் கிளாமர் காட்சிகளை படமாக்கினார்கள். என் மனைவி என்ன பார்த்து முறைக்க ஆரம்பிச்சிட்டா. நல்லவேளை அனுயாவும் என் மனைவியும் நல்ல தோழிகளாக மாறிய நிலையில், எந்த பஞ்சாயத்தும் ஏற்படாமல் தப்பித்துவிட்டேன் நடிகர் ஜீவா" என சிரித்தபடி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement