தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய "பவர் பாண்டி", "ராயன்" படங்களுக்குப் பின் இயக்குநராக இவர் களமிறங்கியுள்ள படம் தான் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்". தனது இயக்கத்தில் முதல் இரண்டு படங்களிலும் தானே நடித்து இருந்த இவர் இப் படத்தில் புது முகங்களான பவிஷ் நாராயண், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் போன்ற genez களை நடிக்கவைத்துள்ளார்.
காதல் break up ஆகி சோகத்தில் இருக்கும் ஹீரோ பிரபுவுக்கு (பவிஷ்) அவரது கல்லூரி நண்பி ப்ரீத்தியுடன் (ப்ரியா பிரகாஷ் வாரியர்) கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. தனது எதிர்கால மனைவியிடம் உடைந்த காதலை பிரபு சொல்ல ஆரம்பிக்கும் போது கதை ஆரம்பமாகின்றது.
சமையலில் சிறந்து விளங்கும் சமையல்காரனான பிரபுவும் கதாநாயகி நிலாவும் (அனிகா சுரேந்திரன்) ஒரு பார்ட்டியில் கண்டதும் காதல் வயப்பட்டு காதலில் விழுகின்றனர். ஹீரோவை தனது பணக்கார அப்பாவிடம் (சரத்குமார்) கூட்டி சென்று அறிமுகப்படுத்தி வைக்கின்றார். இருப்பினும் அவர் ஒரு சமையல்காரன் என்பதால் நிலாவின் அப்பாக்கு சுத்தமாக பிரபுவை பிடிக்கவில்லை ஆகவே நிலவின் அப்பா பழகுவதற்கு கால அவகாசம் கேட்கிறார். குறித்த காலப்பகுதியில் நிலாவின் அப்பாவை பற்றிய உண்மை ஒன்று பிரபுவிற்கு தெரியவருகின்றது. இதனால் பிரபு தங்களது காதலை முறித்து கொள்கின்றார்.
ஒரு சில மாதங்களின் பின்னர் தனது காதலி நிலாவின் திருமண அழைப்பிதழ் பிரபுவுக்கு கிடைக்கிறது. நிலாவின் திருமணத்துக்கு செல்லுமாறு பிரபுவின் வருங்கால மனைவி ப்ரீத்தி பிரபுவை கோவா அனுப்பி வைக்கிறார். கோவாவில் என்ன எல்லாம் நிகழ்ந்தது யார் யார் கூட சேர்ந்தார்கள் என்பதே திரைக்கதை
இப் படத்தின் trailor இல் இது ஒரு வழக்கமான காதல் கதை என்று ரசிகர்களுக்கு சொல்லிவிடுகிறார் நடிகர் தனுஷ். இதுவும் போதாது என்று படத்தில் பவிஷ் தனது ஃப்ளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிக்கும் போதே ‘ரொம்பவெல்லாம் எதிர்பார்க்காதீங்க’ என்று நமக்கு குறிப்பால் உணர்த்துகிறார்.
இப் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் மிகவும் துள்ளலாக வெளியான போதே இது ‘Gen Z' பற்றிய படம் என்பது தெரிந்துவிட்டது. ’கோல்டன் ஸ்பேர்ரோ’ பாடலும் இப் படத்தின் trailor மிகவும் சுவாரஸ்யமாக வெளியாகி இப் படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்த படத்தில் ஹீரோவின் நண்பனாக நடித்துள்ள மேத்யூ தாமஸ்சின் நகைச்சுவை நடிப்பு மற்றும் ஜி .வி பிரகாஷின் இசை என்பன படத்தினை ஒரு படி தூக்கி காட்டியுள்ளது. மற்றும் இன்ஸ்டா புகழ் ரம்யாவின் நடிப்பும் தமிழில் இன்னும் பல படங்களின் வாய்ப்புகள் வருவதற்கு பலமாக அமைந்துள்ளது.
நடுத்தர குடும்ப ஹீரோ கோவாவிற்கு விமானத்தில் செல்வது பார்ட்டி பண்னுவது போன்ற விடயங்கள் ரொம்ப cringe ஆக இருந்தாலும் பழைய நடிகர்கள் முதல் நடித்த பாணியில் இருக்கும் இந்த கதையினை 2k genez காதல் கதை என தனுஷ் பில்டப் பண்ணியிருப்பது நகைச்சுவையாக உள்ளது.
இதைவிட ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ மற்றும் எடிடர் பிரசன்னா ஜி.கே போன்றவர்களின் இந்த படத்திற்கான பணி பாராட்டத்தக்கது. பேபி அனிகாவின் நடிப்பும் சொல்ல கூடிய அளவுக்கு எதுவுமில்லை இப் படம் ஒரு படி மேலே எடுத்து காட்டுவது தனுஷின் குரலில் வெளியாகியிருக்கும் "காதல் fail ","ஏண்டி " இரண்டு பாடல்களும் தனுஷின் சாயலில் இருக்கும் அக்கா மகன் " பவிஷின் " நடிப்பும் இசையும் என்றே சொல்லலாம்.
2K தலைமுறையின் வாழ்வியல் கதையை படமாக எடுத்து தனுஷ் ஒரு புதிய முயற்சியினை செய்தார். ஆனால் திரைக்கதை தெளிவாக அமையாததும் முக்கிய நடிகர்களின் நடிப்பின் அசாதாரண கொள்கைகளின் இல்லாமை காரணமாக இந்த ‘வழக்கமான காதல் கதை’ ஒரே நேரத்தில் ‘பழங்கால காதல் கதை’ ஆக மாறிவிட்டது.
Listen News!