பிரபல நடிகர் தம்பி ராமையா சமீபத்திய பேட்டியில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தனக்கு செய்த உதவி பற்றி உருக்கமாக பகிர்ந்துள்ளார். தற்பொழுது நடந்த திரு. மாணிக்கம் திரைப்படத்தின் வெற்றி விழாவில், அவர் பேசும் போது இது தொடர்பாக ஆழ்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
அதில் தம்பி ராமையா கூறுகையில், "நான் செய்த நல்ல காரியங்களில் ஒன்று சமுத்திரக்கனியுடன் பழகியது என்றதுடன் என் மகன் மற்றும் மகளின் திருமணம் இன்று நிறைவேறியிருப்பதற்கு ஒரே காரணம் கனி தான் என்றார். மேலும் அவர் இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது என்றார். என் மகிழ்ச்சிக்குப் பின்னால் ஒருவன் இருப்பான் என்றால் அது கனி மட்டும்தான்" என்று மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
இது முதல் முறையல்ல, சமுத்திரக்கனி பல்வேறு நேரங்களில் அவரது நண்பர்களுக்கும், திரைத்துறையில் பலருக்கும் உதவி செய்துள்ளவர். இவர் கலைத்துறையில் மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் ஈடுபடுவது அனைவருக்கும் தெரிந்தது என்றார்.
தமிழ் திரையுலகில் பல உறவுகள் மற்றும் நட்புகள் உருவாகும். ஆனால் அவற்றில் சில உறவுகள் உண்மையாக நீடிக்கக்கூடியதாகவும் இருக்கும். இதற்கு நானும் சமுத்திரக்கனியும் சிறந்த உதாரணம் என்றார்.
சமுத்திரக்கனி திரைத்துறையில் ஒரு வலுவான இயக்குநராகவும், திறமையான நடிகராகவும் மட்டுமல்லாமல், நண்பர்களுக்காக எந்த நேரத்திலும் கைகொடுப்பவராகவும் இருக்கிறார். அவரின் எளிமை, நேர்மை மற்றும் மனித நேயம் அவரை திரையுலகில் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு தனித்துவமான மனிதராக மாற்றியுள்ளது.
"எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால் வாழ்வில் என்னுடைய மகிழ்ச்சிக்கு ஒருவன் காரணமாக இருந்தால் அது கனி மட்டும் தான். அவருடைய உதவி இல்லாமல் இன்று என் குடும்பம் இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்காது" என அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் ராமையாவின் உருக்கமான கதையை கேட்ட ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சந்தோசப்பட்டுக் கொண்டனர்.
Listen News!