விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை கடந்து உள்ளது. இந்த சீசனில் விஜய் சேதுபதி தனக்கே உரித்தான பாணியில் போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடி மலர்வது போல, இந்த சீசனிலும் தர்ஷிகாவும் விஷாலும் சிக்கி உள்ளார்கள். ஆரம்பத்தில் தர்ஷிகா கடுமையான போட்டியாளராக காணப்பட்டார். ஆனால் எப்போது அவருடைய பார்வை விஷால் பக்கம் திரும்பியதோ அதில் இருந்தே அவர் தான் வந்த நோக்கத்தை மறந்து செயற்பட்டு வருகிறார்.
d_i_a
பிக் பாஸ் வீட்டில் சமீப நாட்களாகவே விஷாலும் தர்ஷிகாவும் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே விஷாலுக்காக தர்ஷிகாவும் பவித்ராவும் சண்டை போட்ட காட்சிகள் படு விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தர்ஷிகாவும் விஷாலும் கட்டிப்பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே இருவரும் காதல் லீலைகளில் ஈடுபட்டு வருவதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் போது, அதை உறுதி செய்யும் வகையிலேயே இருவரும் நடந்து கொண்டு உள்ளார்கள்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் 200 சத வீதம் எபெக்ட் போடும் போட்டியாளர்கள் இவர்கள்தான், லிங்க் இருக்குதா?, இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் இவர்களை தூக்கி விடுங்கள் என்று பலவாறு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்..
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக விஷால், தர்ஷிகா தொடர்பான வீடியோக்கள் வெளியாகி விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவமும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!