• Nov 23 2025

கார்த்தி - க்ரித்தி ஜோடி ரசிகர்களை கவருமா.? வெளியானது ‘வா வாத்தியார்’ பட லேட்டஸ்ட் அப்டேட்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நயமான கதை சொல்லலுக்காக பெயர் பெற்ற இயக்குநர் நலன் குமாரசாமி, பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக திரும்பும் படம் ‘வா வாத்தியார்’. இதன் முக்கிய கதாநாயகனாக கார்த்தி நடிக்க, கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியிடப்படும் தேதியை தற்பொழுது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


நலன் குமாரசாமி தனது ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அவரின் படங்களில் காணப்படும் அற்புதமான நகைச்சுவை , நவீன கதைக்கேடுகள், மற்றும் வாழ்க்கை சார்ந்த மனித உணர்வுகள் தற்போது ‘வா வாத்தியார்’-ல் எப்படி அமைந்துள்ளது என்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இது வரை வெளியான போஸ்டர்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் படங்களில் கார்த்தி ஒரு சக்திவாய்ந்த வேடத்தில் காட்சியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படம் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement