• Jan 08 2026

சாண்ட்ரா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட கம்ருதீன்... சற்றும் எதிர்பாராத சம்பவம்.!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் reality show-களில் ரசிகர்களின் மனதைப் புலம்ப வைத்த பிக்பாஸ் சீசன் 9 சமீப காலமாக பரபரப்பான சம்பவங்களால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, Ticket To Finale டாஸ்கில் நடந்த சம்பவங்கள், போட்டியாளர்களின் நடத்தை மற்றும் சமூக வலைத்தளங்களில் உருவான சர்ச்சைகள் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த சீசனில், பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோரின் நடத்தை முக்கியமாக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்திய கார் டாஸ்கில் சாண்ட்ராவை காரில் இருந்து வெளியே தள்ளிய சம்பவம், ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை கிளப்பியது. 

இந்நிலையில், சமீபத்திய ப்ரோமோவில், விஜய் சேதுபதி பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் காட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார்.


இதனைத் தொடர்ந்து பார்வதி, “நான் செய்தது ரொம்ப பெரிய தப்பு சாண்ட்ரா... வாழ்க்கையில் கண்டிப்பா மறக்கவே முடியாத அளவுக்கு ஒரு தவறு செய்து விட்டேன்.” என்று கூறியுள்ளார். 

இதன் பின், கம்ருதீன் சாண்ட்ரா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார், அதற்கு சாண்ட்ரா வேண்டாம்.. வேண்டாம்..என்கிறார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.  

அத்துடன், பல ரசிகர்கள் கமெண்ட்ஸ் மூலம் விஜய் சேதுபதி எடுத்த நடவடிக்கை நியாயமானது மற்றும் நேர்மையானது என பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement