விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 9ஆவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் 37 ஆவது நாளில் கால் பதித்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் பிக் பாஸ் இல்லம் இரண்டாக பிரிந்துள்ளது. அதாவது இந்த முறை வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டாகப் பிரிந்து, கானா வினோத் சாம்ராஜ்யம் மற்றும் தர்பீஸ் சாம்ராஜ்யம் என்று இரண்டு பிரிவினராக காணப்படுகின்றனர்.

அதில் கானா சாம்ராஜ்யமா? இல்லை தர்பீஸ் சாம்ராஜ்யமா? என்று தொடங்கட்டும் போர் என முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதில் அனைத்து போட்டியாளர்களும் ராஜ உடையில் காணப்படுகின்றனர்.
மேலும், திவாகர் ராஜ உடை அணிந்தும் வழமை போல தன்னுடைய அலப்பறைகளை காட்டுகின்றார். இறுதியில் அவரை போட்டியாளர்கள் வெளுத்து வாங்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த வாரம் எப்படி இடம்பெற உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!