• Sep 28 2025

ரசிகர்களால் தான் இது சாத்தியமானது! கலைமாமணி விருது கிடைத்ததுக்கு ஸ்வேதா நெகிழ்ச்சி கருத்து

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா இசைத்துறையில் ஒரு தனி குரலாக திகழும் பாடகி ஸ்வேதா மேனன், அவரது நீண்ட பயணத்திற்கு அங்கீகாரம் கிடைத்த முக்கிய தருணமாக “கலைமாமணி விருது” பெற்றிருக்கிறார். இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து, ஒரு பிரத்யேக பேட்டியில் பேசும் போது, அவர் தெரிவித்த கருத்துகள், ஒரு கலைஞனின் கனவுகளை வெளிப்படுத்துகின்றன. 


பாடகி ஸ்வேதா மேனன், கடந்த 15 வருடங்களாக தமிழ் மற்றும் பிற மொழிகளில் பாடல்கள் பாடி வருகின்றார். தனது நுட்பமான குரலும், வண்ணமயமான உச்சரிப்புகளும், பல இசையமைப்பாளர்களால் பாராட்டப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தற்பொழுது கிடைத்த விருது ஒரு சாதனை மட்டுமல்ல, ஒரு நெஞ்சார்ந்த அங்கீகாரமாகவும், பாராட்டாகவும் அவர் எடுத்துக்கொள்கிறார். ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்பதை மிகுந்த வாழ்த்துபெறும் மனப்பான்மையோடு தெரிவித்தார்.


அந்த பேட்டியின் போது, " ரசிகர்களால் தான் இது சாத்தியமானது. இசையமைப்பாளராக வேண்டும் என்பதே என் கனவு. 15 வருடங்களுக்கு மேலாக பாடிவரும் எனக்கு கிடைத்த அங்கீகாரம் இது. " என பாடகி ஸ்வேதா மேனன் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement