• Jan 19 2025

ஹாட்ரிக் தோல்வி படங்கள் கொடுத்த ஜெயம் ரவி.. மாமியார் சொன்ன ஆறுதலான விஷயம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி ஒரு காலத்தில் ஹாட்ரிக் வெற்றி படங்கள் கொடுத்த நிலையில் தற்போது அவர் ஹாட்ரிக் தோல்வி படங்கள் கொடுத்து வருவதை அடுத்து தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் தயாரிக்க தயங்கி வருவதாகவும் ஆனாலும் அவரது மாமியார் ஜெயம் ரவிக்கு முழு ஆதரவாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி தனி ஹீரோவாக நடித்த ’பூமி ’ ‘அகிலன்’ ’இறைவன்’ ஆகிய மூன்று படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’சைரன்’ என்ற திரைப்படம் தோல்வியடைந்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ என்ற மல்டி ஸ்டார் படம் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் ஜெயம் ரவியின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால் அவரை வைத்து படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ’பிரதர்’ ’ஜெனி’ மற்றும் ’காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்கள் வெற்றி அடைந்தால் மட்டுமே ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இல்லை எனில் அவர் திரையுலகில் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 

இருப்பினும் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் என்பதால் அவர் தொடர்ச்சியாக ஜெயம் ரவியை வைத்து படங்கள் தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் குறிப்பாக ’அடங்கமறு’ இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அந்த படம் நிச்சயம் ஜெயம் ரவியின் திரை உலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

‘அடங்கமறு’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அடுத்த ஆறு ஆண்டுகளில் அந்த படத்தின் இயக்குனருக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஜெயம் ரவிக்கு அவர் கூறிய கதை பிடித்து விட்டதால் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement