மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் முதன்மையாக நடித்து வருபவரே நடிகை லிஜோமோல் ஜோஸ். இவர் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தின் மூலமே அறிமுகமானார். இதனை அடுத்து திரையரங்கில் அதிகளவு வசூலைப் பெற்ற ஜெய் பீம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
தற்பொழுது இந்நடிகை காதல் என்பது பொதுவுடைமை என்ற படத்தில் நடித்து வருகின்றார். அந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நேர்காணலில் கலந்து வருகின்றார். தற்பொழுது நேர்காணல் ஒன்றில் கதைத்த வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
அதில் அவர் கூறுகையில் எனக்கு ஒரு பையனை பிடித்திருக்கின்றது என்றால் வீட்டில் ஓப்பனாக கூறலாம் ஆனால் ஒரு பெண்ணை பிடித்திருக்கின்றது என்று ஓபனாக வீட்டில் கூறமுடியாது அத்தகைய படம் தான் அது எனத் தெரிவித்தார்.
மேலும் தான் ஆண்களுடன் ரொமான்ஸ் பண்ணி இருக்கேன் எனினும் ஒரு பொண்ணு கூட ரொமான்ஸ் பண்ணுறது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது எனக் கூறியிருந்தார் . இது ரசிகர்கள் மத்தியில் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.
Listen News!