• Nov 23 2025

சினிமால இருந்து விலகி இரண்டு வருசமாச்சு.. அரவிந்த்சாமி போட்டு உடைத்த உண்மை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான ரோஜா படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகர் அரவிந்த்சாமி. இதைத்தொடர்ந்து அவர் நடித்த  படங்களும் ஹிட் கொடுத்தன.   இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மெய்யழகன் திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்றது. 

நடிகர் அரவிந்த்சாமி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை ஒன்றின் விழாவில் கலந்து கொண்டார். 

அங்கு ஆண்களுக்கான புதிய தங்க நகைகள் கலெக்ஷனை அறிமுகப்படுத்தினார். இதன் போது கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 


இந்த நிலையில், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த்சாமி, ஏஐ வணிகம் தொடர்பில் ஈடுபட்டு வருவதால் நடிப்பில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு விலகி இருப்பதாக கூறினார். 

மேலும்  மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறு என இயக்குனர் கூறியதற்கு,  தமிழ்நாட்டில் மெய்யழகன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பில் நான் திருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்தார். 

அதேபோல் நடிகர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் பதில் அளித்துள்ளார். 

Advertisement

Advertisement