வெள்ளித்திரையில் நடிகர் விஜய், தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் போன்ற பல நடிகர்களின் படங்களில் நடித்து காமெடி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பி இருந்தார். இவரை இவருடைய குடும்பத்தினர் மீண்டும் பழையபடி மீட்டுக் கொண்டு வந்தனர். பூரணமாக உடல்நலம் தேறிய ரோபோ சங்கர், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவ்வாறு புதிய படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்த ரோபோ சங்கர், திடீரென இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் இவருக்கு நீர்ச்சத்துக் குறைபாடு, இரத்த அழுத்தம் இருப்பதாக கூறி மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.
அதன்பின்பு மேலதிக சிகிச்சைக்காக இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருப்பதும், செரிமான குழாயில் ரத்தக் கசிவு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த ரோபோ சங்கர் செப்டம்பர் 18 ஆம் தேதி உயிரிழந்தார். இவருடைய இழப்புக்கு பல பிரபலங்கள், ரசிகர்களும் தங்களுடைய அஞ்சலிகளை நேரில் சென்று செலுத்தினர்.
இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது , நீ எங்களை விட்டு போனது நான்கு நாளாகின்றது.. இன்னும் நம்ப முடியவில்லை. உன் சிரிப்பு உன் அன்பு உன் நல்ல மனசு எங்கும் இருக்கின்றது போல. நீ எப்பொழுதும் பிறருக்காக நல்லது செய்தாய். எந்த நிலையிலும் உதவ முன்வந்தாய்.
உன் வாழ்க்கை குறுகியதாய் இருந்தாலும், உன் நினைவுகள் என்றும் எங்கள் மனசுக்குள் நிலைத்து இருக்கப் போகின்றது. உன்னால் எத்தனை பேருக்கு சிரிப்பு வந்திருக்கும், எத்தனை பேருக்கு நிம்மதி கிடைத்திருக்கும் என்று யோசிக்கும் போது நீ உண்மையிலே ஒரு நல்ல ஆன்மா என்பதை கொஞ்சமும் சிந்திக்க முடியவில்லை.
நீ எங்கள் நட்பில் விட்ட வெற்றிடத்தை எதுவும் நிரப்ப முடியாது. ஆனாலும் உன் நினைவுகளோடு நாங்கள் வாழ்வோம். எப்பொழுதும் நீ எங்கள் பிரார்த்தனையில் இருப்பாய் நண்பா.. என்று பதிவிட்டுள்ளார்
Listen News!