ஏ.ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் மதராஸி. இந்த படம் வசூலில் மாபெரும் வெற்றி பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் தாண்டி ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ருக்மணி வசந்த், பிஜூ மேனன் நடிப்பில் வெளியாகி கமர்சியல் ஆக்சன் படமாக இருப்பதாக நல்ல விமர்சனங்களை பெற்றன. ஆனாலும் சில லாஜிக் ஓட்டைகள் இருப்பதாக இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்தன.
தொடர்ச்சியாக பல தோல்விப் படங்களை கொடுத்த முருகதாஸ், இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றன.
டாக்டர் படத்தின் மூலம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து டான் படமும் 100 கோடி வசூல் எட்டியது. அதன் பின்பு அமரன் படம் சுமார் 300 கோடி வசூல் எட்டியது. தற்போது நான்காவது முறையாக மதராஸி படத்தின் மூலம் மீண்டும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், மதராஸி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஏ. ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Listen News!