சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் நடித்த படம் தான் நட்புன்னா என்னான்னு தெரியுமா இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது.
இதை தொடர்ந்து கவின் நடித்த ஹாரர் திரைப்படம் தான் லிப்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்பு கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படம் இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இலன் - கவின் கூட்டணியில் உருவான படம் தான் ஸ்டார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் ஒரு இளைஞனை பற்றிய படமாக காணப்பட்டது.
அதன் பின்பு நெல்சன் தயாரிப்பில் உருவான படம் தான் பிளடி பேக்கர். டார்க் காமெடி ஜானரில் உருவான இந்த படத்தில் கவின் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில் யாசகர் போல நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இறுதியில் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் தான் கிஸ். காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கவினின் வளர்ச்சி பாதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது IMDB ரேடிங்ஸால் தன்னை நிரூபித்துள்ளார்.
அதாவது 2019 வெளியான நட்புனா என்னான்னு தெரியுமா என்ற தனது முதல் படத்தில் 5.3/10 ரேட்டிங் பெற்ற கவின், 2021ம் ஆண்டு வெளியான லிப்ட் படத்திற்கு 6.5/10 புள்ளிகளையும்,
பிறகு 2023 வெளியான டாடா படத்தில் 8.1/10 ரேட்டிங்கையும் பெற்றார். 2024 வெளியான ஸ்டார் படத்திற்கு 6.5/10 யும், கிஸ் படத்திற்கு 8.4/10 என கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!