• Jul 22 2026

ராதிகா வைத்த செக்மென்ட்டில் வசமாக சிக்கிய கோபி.. கம்பி எண்ணப் போகும் ஈஸ்வரி?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை நினைத்து கலங்கி இருக்கின்றார்.

மறுபக்கம் ராதிகாவுக்கு கோபி ஜூஸ், காபி ஏதாவது வாங்கிட்டு வரவா என கேட்க, கமலா வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார். மேலும் கோபியுடன் மையூ போகவும் அதையும் தடுத்து நிறுத்தி விடுகிறார்.

இதைத் தொடர்ந்து ராதிகாவும் உங்கம்மா நம்ம குழந்தையை கொன்னுட்டாங்க, இந்த அளவுக்கு போவாங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல எனக் சொல்லி கதறியழ கோபியும் கண்கலங்கியபடி அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் ஈஸ்வரியை பார்க்க பாக்கியா வந்த போதும் ஈஸ்வரி உண்மை எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகின்றார். பாக்கியா போன பின்பு மீண்டும் கலங்கி அழுகிறார்.

இதை அடுத்து ராதிகாவை டிஸ்டார்ஜ் செய்து கோபி வீட்டுக்கு அழைத்து வர தயாராக இருக்க, நான் அம்மாவோட ஊருக்கு போறேன் என்று ஷாக் கொடுக்கிறார் ராதிகா, மேலும் எனக்கு அந்த வீட்டுக்கு வர முடியாது. உங்க அம்மா இருக்கிற வீட்ல என் பொண்ண விடமாட்டேன் என்று கமலாவும் உறுதியாக இருக்கின்றார்.

ஆனாலும் கோபி எனது அம்மா எதுவும் பண்ணியிருக்க மாட்டாங்க என்று ஈஸ்வரிக்கு சப்போர்ட் பண்ண, ராதிகா அந்த வீட்ல இருக்கணும்னா உங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க இல்லன்னா நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவர்களை உள்ள தள்ளுவேன் என கமலா எச்சரிக்கின்றார்.

இதனால் எப்படி அவங்கள வெளியே அனுப்ப முடியும், இதுக்கு ஒரு சொல்யூஷன் தாரேன் என்று கோபி சொல்ல, அது நான் எதிர்பார்க்கிற சொல்யூஷனா இருக்குமா என்று ராதிகா கேட்கின்றார் இதுதான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

Advertisement

Advertisement