• Jan 19 2025

அடேங்கப்பா..!! சிறகடிக்க ஆசை பிரபலங்களுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியல்களுக்கு என்று பெரும்பாலான ரசிகர்  பட்டாளம்  காணப்படுகிறது. அதிலும் தற்போது இதில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

இந்த சீரியலில் நடிக்கும் இளம் ஜோடிகள் புது முகங்களாக காணப்பட்ட போதிலும் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள் ரசிகர்கள். மேலும் இதில் நாளுக்கு நாள் கதை விறுவிறுப்பாகவும் மாறுபட்ட ரீதியிலும் இருப்பதால் டிஆர்பி ரேட்டிங் முன்னிலை வகித்து வருகின்றது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் ஒரு நாளுக்குரிய சம்பள விபரம் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வெற்றி வசந்துக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகின்றது. அதேபோல ஹீரோயின் ஆன கோமதி பிரியாவுக்கு 12,000 ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுகின்றது.


இதைத் தொடர்ந்து அண்ணாமலை, விஜயா போன்ற கேரக்டரில் நடிப்பவர்களுக்கு 8000 ரூபாவும், ரோகினி , மனோஜ்க்கு 6 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகின்றது.

இவர்களுக்கு அடுத்ததாக இந்த சீரியலில் நடிக்கும் ரவி, ஸ்ருதிக்கு 5000 ரூபாயும், சத்தியா, சீதா போன்றோருக்கு 3000 ரூபாவும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுகின்றது.

இவ்வாறு சிறகடிக்க ஆசை சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இந்த சீரியல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement