• Oct 13 2024

வரலட்சுமிக்கு இன்னும் ஹனிமூன் முடியவில்லையா? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் சரத்குமார். இவருடைய மகள் வரலட்சுமிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவர் நிக்கோலாய் சத்தேவ் என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார் .

நிக்கோலாய் பெரிய தொழிலதிபராக காணப்பட்ட போதிலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 16 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். எனினும் முதலாவது மனைவியை சட்டபூர்வமாக பிரிந்ததை தொடர்ந்து வரலட்சுமியை காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளார்.

தாய்லாந்தில் ஒரு சொகுசு கப்பலில் தான் நிக்கோலாய் வரலட்சுமிக்கு தாலி கட்டினார். ஆனால் அங்கு திருமணம் செய்தால் இந்தியாவில் செல்லாது என்பதால் சென்னை தாஜ் ஹோட்டலிலும் திருமணம் நடந்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் தனது மனைவியோடு வந்தார். எப்போதும் அமைதியாக இருப்பவர் வரலட்சுமி கேட்டதால் திருமண விழாவில் குத்தாட்டம் போட்டதாகவும் கூறப்படுகிறது.


அது மட்டும் இன்றி தனது காதல் மனைவி வரலட்சுமிக்கு தங்கத்தில் செருப்பு கொடுத்து அசத்தியுள்ளார் நிக்கோலாய். அதே போல வைரத்தில் சேலையும், முக்கியமாக 200 கோடி ரூபாய் சொத்தை வரலட்சுமி பெயரில் எழுதி வைத்துள்ளார். 

இதை தொடர்ந்து தற்போது தனது காதல் கணவருடன் பல இடங்களில் சுற்றி திரிந்து வருகிறார் வரலட்சுமி. இது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது குடும்பமாகவே வெக்கேஷன் ஒன்றுக்கு சென்றுள்ளார்கள் சரத்குமார் குடும்பத்தினர். இதன் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் ராதிகா, நிக்கோலாய், சரத்குமார் ஆகியோர் காணப்படுகின்றார்கள். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இதை பார்த்த ரசிகர்கள் வரலட்சுமிக்கு இன்னும் ஹனிமூன் முடியவில்லையா? ஒவ்வொரு இடமாக சுற்றித்திரிந்து வருகின்றாரே என கலாய்த்து தள்ளி வருகின்றார்கள்.







Advertisement