• Oct 08 2024

ஈகோ இல்லாம வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான்.. லப்பர் பந்தை பாராட்டிய வெங்கடேஷ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தோல்வியை தழுவுவதும், சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. சமீபத்தில் வெளியான வாழை திரைப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து இருந்தார்கள்.

இதை தொடர்ந்து கடந்த வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுது. கடந்த ஆண்டு பார்க்கிங் படத்தின் மூலம் ஹிட் கொடுத்த ஹரிஸ்  கல்யாண் இந்த ஆண்டு லப்பர் பந்து படத்தின் மூலம் சிக்ஸர் அடித்துள்ளார் என பலரும் பாராட்டி உள்ளனர்.

மேலும் வெறும் பாராட்டுக்களுடன் மட்டும் நிற்காமல் படத்தை தியேட்டருக்கு சென்று கட்டாயம் பாருங்கள் என பல பிரபலங்களும் சிபாரிசு செய்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி நடுவரான வெங்கடேஷ் பட் இது தொடர்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


அதாவது தான் பெரிதாக தியேட்டருக்கு சென்று படங்களை பார்ப்பது கிடையாது. மனைவியின் சிபாரிசின் பெயரில் லப்பர் பந்து படத்தை பார்த்தேன். ரொம்பவே நல்ல படம். ஒரு நிமிடம் கூட போர் அடிக்கவில்லை. கதையை சிறப்பாக கையாண்டு ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்கள். இந்த படத்தை கட்டாயம் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என வீடியோ போட்டுள்ளார் வெங்கடேஷ் பட்.

சமீப காலங்களாகவே வெளியாகும் படங்கள் ரத்தம், வன்முறை, துப்பாக்கி என காட்டப்படுகின்றது. ஆனால் லப்பர் பந்து படத்தில் இது எதுவுமே இல்லை..  ஈகோ இல்லாமல் வாழ்ந்தால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை மிகவும் தத்துவ ரூபமாக எடுத்துக்காட்டியுள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து என  வெங்கடேஷ் பாராட்டியுள்ளார்.

Advertisement