• Jan 18 2025

இதுவே கலாட்டா நிகழ்ச்சி என்றா காமெடியா பார்த்து இருப்பாங்க..?வினுஷா பற்றி ரசிகைகளுக்கு விளக்கமளித்த நிக்சன்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்த நிக்சன் ஒரு இந்திய நடிகர் என்பதோடு ராப் பாடல்களை பாடுவதில் பிரபலமாக காணப்பட்டார்.

விஜய் ஆண்டனியின் “திமிரு புடிச்சவன்” திரைப்படத்தின் மூலம் அவர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அவரது சிறப்பான நடிப்பு அவரது நடிப்புத் திறமைக்கு சான்றாக அமைந்தது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சனுக்கு அதிஷ்டம் அடித்தது போல, அவரது முதலாவது படைப்பு வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், பிக் பாஸ் நிக்சன் தனது ரசிகர்களுடன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த நிக்சன் இதுவரையில் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை என்றே தெரிகின்றது. எனினும், தற்போது அவருடைய ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவர்களுடன் ஃபன்னாக கதைத்து பேசியுள்ளார். 

அதன்படி, பேசிய நிக்சன்,  நான் ஸ்கூல்ல படிக்கும் போது NXN என்று கிறுக்கி கொண்டே இருப்பன். இப்போ அந்த ஸ்கூல் பையனோட கனவு நிஜமாகி நிக்சன் கிங்டம் ஆகி இருக்கு.


நிக்சன் பிக் பாஸ் வீட்டில் வினுஷா பற்றி உருவக் கேலி செய்து இருந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் தனது ரசிகர்களிடம் பேசிய நிக்சன், இதுவே ஒரு கலாட்டா நிகழ்ச்சியில் இவ்வாறு பேசி இருந்தா, அது வெறும் காமெடியாகவே பார்க்கப்பட்டு இருக்கும். 

ஆனா அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய படியால் தான் பெரிய பிரச்சினை ஆனது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது யாரை பற்றி பேசினாலும் நிதானமாக, அடுத்தவரை மனம் நோகாமல் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement