தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் மீனவ கிராமத்தில் உள்ள நாடோடி மக்கள் கடலுக்கு நீண்ட நாட்களாக மீன் பிடிக்கச் செல்வதில்லை. அந்தக் கடல் பகுதியை அவர்கள் சபிக்கப்பட்டதாக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.மேலும் அதனை மீறினால் கடலில் சடலமாகக் கரை ஒதுங்கும் என்பது இங்கு பரவலான நம்பிக்கையாக காணப்படுகின்றது.1982-ல் இறந்த போஸ் (அழகம் பெருமாள்) என்பவரின் ஆத்மா இந்த வழக்கை கட்டுப்படுத்துகிறது என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.
இத்துடன் அப்பகுதியில் உள்ள கன்னிப் பெண்கள் குறித்தும் ஒரு மர்மம் உள்ளது. அவர்கள் சில சமயங்களில் மாயமாக காணாமல் போகின்றனர் மேலும் சிலர் பிணமாகக் காணப்படுகின்றனர். இதன் காரணம் என்ன என்பதை ஆராய்ந்ததும் உள்ளூர் தாதா தாமஸிடம் (ஷிபுமோன்) மீனவராக பணியாற்றும் கிங் (ஜி.வி.பிரகாஷ்குமார்) இந்த மர்மத்தை பரிசுத்தமாகத் தீர்க்க முயற்சிக்கின்றார்.
இந்த சுவாரஸ்யமான கதையில் மாயம், நம்பிக்கை, மர்மம் முக்கியமாக இடம்பெறுகின்றன.அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் ஒரே கதைக்குள் ஹாரர், த்ரில்லர், அமானுஷ்யம் மற்றும் சாகசம் போன்ற பல ஜானர்களை கலந்துக்கொண்டு ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் வழக்கமான படமாக தோன்றினாலும் கதையின் மையத்தில் கடலுக்குள் நாயகன் செல்லும் காட்சியில் சினிமாவில் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளனர்.
கடலுக்குள் நிகழும் அமானுஷ்ய சம்பவங்களும் சாகசங்களும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு படபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்கும் உணர்வையும் அந்த காட்சிகள் கொடுத்துள்ளது.ஜி .வி பிரகாஷ்குமார் காதலியாக வரும் திவ்யபாரதி வழக்கமாக கதா நாயகிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலையை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.குறுகிய நேர கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் வில்லத்தனமான நடிப்பில் கவர்கிறார் சேத்தன். மேலும் இப் படத்தில் அழகம்பெருமாள், ஷபு மோன், குமரவேல், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை மிகவும் கட்சிதமாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் கடல் நீலம் பளிச்சென காட்டப்பட்டுள்ளது.ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை இரண்டாம் பாதியில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது இது காட்சிகளுடன் பொருந்தி செல்வதாக அமைந்துள்ளது. முதல் பாதியின் நீளத்தைப் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் கவனமாகச் செதுக்கியுள்ளார்.
மேலும் மிரட்டலான கடல் சாகசத்ரில்லராக உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட "கிங்ஸ்டன்" திரைப்படம் திரைக்கதை கோளாறுகள் காரணமாக தடுமாறி முழுமையான அனுபவத்தை வழங்க முடியாமல் போயுள்ளது.
Listen News!