• Mar 09 2025

செக் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல இயக்குநர்..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவிற்கு செக் மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.2018-ம் ஆண்டில் அவர் ஒரு ஹார்ட் டிஸ்க் வாங்கியதற்காக கொடுத்த செக்கின் மதிப்பு வங்கியில் பணமில்லாமல் இரு முறை திரும்பியது. இதனால் அவர் மீது காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி அந்தேரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.3,72,219 அளவிலான பணத்தொகையை புகார்தாரருக்கு 3 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த உத்தரவிடப்பட்டது.


இந்த நிலையில் ராம் கோபால் வர்மா தனது தண்டனையை நிறுத்தி வைக்க மேல்முறையீடு செய்தார். அவரது மனு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ராம் கோபால் வர்மா நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க உத்தரவிட்டார். மேலும் இவர் மீதான பிடிவாரண்ட் வழக்கு வருகின்ற ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement