தமிழ் சினிமா உலகத்தில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரம் நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே நடைபெறும் விவாகரத்து வழக்கு. இருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள், சந்தேகத்திற்குரிய கருத்துக்கள், நேரடிக் குற்றச்சாட்டுகள் என்பன மூலம் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் சூரி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது 'மாமன்' பட வெற்றியை அடுத்து மீடியா சந்திப்பில் கலந்துகொண்ட சூரி, பத்திரிகையாளர்களுடன் பேசும் போது, நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி விவகாரத்தைப் பற்றி கேட்ட கேள்விக்கு உண்மையான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
"திரையில் மட்டும் அல்ல… எல்லாரின் வீடுகளிலும் பிரச்சனை வரும். ஆனால் நாம சினிமாவில இருக்கிறதால, எங்கட பிரச்சனைகள் பெரிய விஷயமாத் தான் தெரியும். இந்த பிரச்சனைகளை எல்லாம் பெரிதாக்குவது மீடியா தான்." என்றார் சூரி.
அதன்பின், "ரவி-ஆர்த்தி விவகாரம் நல்ல முடிவுக்கு வரணும், இருவரும் மனஅழுத்தம் இல்லாமல் வாழணும். யாரும் சண்டை போட்டு திரிய வேண்டாம். எல்லாரும் நல்லா இருக்கணும்" எனவும் தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர் “மாமன்” படத்தின் கதாப்பாத்திரம் போல வாழ்க்கையிலும் நீங்கள் கஷ்டப்படுவோருக்கு உதவி செய்வீர்களா?” என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார்.
அதற்கு, "கண்டிப்பாக… யாராவது உண்மையிலேயே கஷ்டப்படுறாங்கன்னா, என்னால் முடிந்த உதவியை நிச்சயமாக செய்வேன். படம் வேறு, வாழ்க்கை வேறு இல்லை. எப்போதும் மனிதநேயத்தோடு தான் இருக்க வேண்டும்." என சிறப்பாக பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த உரையாடலுக்குப் பிறகு, சூரியின் பேச்சு இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது. ரசிகர்கள் பலரும், "சூரி போல மனம் திறந்த கலைஞர்கள் சிலரே இருக்கின்றனர்..!",என சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
Listen News!