• Jan 19 2025

பழம் பெரும் நடிகை சாவித்திரியின் செல்லப்பிராணி சிறுத்தையா?- இப்படி பயமில்லாமல் கூட்டிட்டு போகின்றாரே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை  சாவித்திரி.இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு நடித்து சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்து நடிகையர் திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

அந்தக் காலத்தில் ஜெமினி கணேஷன் மற்றும் சாவித்திரி இணைந்து நடித்த திரைப்படங்கள் மறக்க முடியாத அளவிற்கு பல விடயங்களை உள்ளடக்கி நடித்திருப்பார்கள்.


தொடர்ந்து நடித்த வந்த இவர்கள் நிஜத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ் என்ற மகனும் சாமுண்டீஸ்வரி என்ற மகளும் இருக்கின்றார்கள்.

இந்திய சினிமாவே வியர்ந்து பார்க்கும் நடிகையான இவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் அண்மையில் வெளியாகியிருந்தது. இதில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இதற்காக கீர்த்தி பல விருதுகளையும் பெற்றிருந்தார்.

சாவித்திரி மிகவும் இரக்க குணம் கொண்டவர். கோடி கோடியாய் சம்பாதித்து அத்தனையும் தான தருமங்கள் செய்துவிட்டு சாகும்போது கையில் காலணா கூட இல்லாமல் இறந்தாரே என்று சாவித்திரிக்காக வருத்தப்படும் ரசிகர்கள் இன்றும் உண்டு.


மேலும் நடிகை சாவித்திரி தனது வீட்டில் சிறுத்தையை வளர்த்து வந்துள்ளார்.அவருடைய வீட்டில் சிறுத்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.மேலும் நடிகை சாவித்திரி தனது வீட்டில் சிறுத்தையை வளர்த்து வந்துள்ளார்.அவருடைய வீட்டில் சிறுத்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement