• Jan 20 2025

ராசிகன்னாவுக்கு குழந்தையா ? இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தால் பரபரப்பு !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

முன்னணியாக இருக்கும் நடிகர்கள் , நடிகைகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என்றாளே அது ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையிலேயே சமீபத்தில் நடிகை ராசிக்கன்னா போட்ட இன்ஸ்ட்டா பதிவு வைரலாகின்றது.


ராசி கன்னா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கிறார். இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட்  திரைப்படத்தில் அறிமுகமானார்.


இவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் குழந்தை ஒன்றை வைத்திருப்பது போன்று போட்டோ போட்டிருந்த நிலையில் ராசிகன்னாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அது அவரது மருமகள் ஆகும். அதனை உருக்கமாக தனது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "எனது அழகான மருமகளின் வருகையால் எங்கள் குடும்பம் மிகவும் அழகாகிவிட்டது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் ஏற்கனவே உன்னை நேசிக்கிறேன், எங்கள் குட்டி இளவரசி" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement