• Jan 20 2025

வயக்காட்டுல எல்லாம் ஓபனா காட்டுறீங்க... திருச்சி சாதனாவுக்கு கிடைத்த அசிங்கம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது டிக் டாக் பிரபலங்கள், இன்ஸ்டா  பிரபலங்கள், youtube பிரபலங்கள் என சமூக வலைத்தளங்களில் பிரபலங்களாக காணப்படும் ஒரு சிலர் படங்களில் நடிப்பதற்கும் கால் பதித்துள்ளார்கள்.

அந்த வகையில் ஜிபி முத்து, காத்து கருப்பு கலையை தொடர்ந்து தற்போது திருச்சி சாதனா 'அறம் செய்' என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் விழா அண்மையில் தான் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய திருச்சி சாதனா, தான் ஜெயலலிதா அம்மா வேடத்தில் நடித்துள்ளதாகவும் இந்த படத்தை பார்ப்பதற்கு எல்லாரும் தியேட்டர்களுக்கு வருமாறு தெரிவித்திருந்தார். மேலும் பலரும் தயங்கி நின்றபோது தான் தைரியமாக இந்த கேரக்டரில் நடிக்க வந்ததாகவும் கூறினார்.


இந்த நிலையில் , 'அறம் செய்' படக் குழுவினர் ஒருவர் மேடையில் பேசும் போது திருச்சி சாதனாவை அசிங்கப்படுத்தி உள்ளார்.

அதாவது அவர் கூறுகையில், அன்றைய காலகட்டத்தில் தாய்மார்கள் தனது பிள்ளைக்கு பால் கொடுக்க வேண்டும் என்றாலும் தனது கணவரை விலக்கி வைத்து தான் கொடுப்பார். ஆனால் இப்போது அப்படி இல்லை எல்லாரும் ஓபன் ஆக காட்டிக் கொண்டு உள்ளார்கள்.

திருச்சி சாதனா தனது திறமையினால் முன்னுக்கு வந்துள்ளார். இன்றைக்கு அவருடைய கிராமத்தில் அவரின் வீடு தான் பெரியதாக காணப்படுகிறது. அது ரொம்ப சந்தோசம் தான்.

ஆனால் வீடியோ எடுக்க வயக்காட்டுக்கு போய் குளிக்கிறீங்க.. அதை பிரபஞ்சம் பாக்குது. நான் முதல் கொண்டு ரசிகர்கள் வரை பார்க்கிறார்கள். உங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் நான் அதில் தலையிட விரும்பவில்லை. இவ்வாறு தனது உணர்வையும் வலியையும் வெளிப்படுத்தி உள்ளார்.  இதற்கு திருச்சி சாதனா எதையும் பேச முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement