• Jan 18 2025

சார்பாட்டா பரம்பரை நடிகர் ஜான் விஜய் பற்றி இதுவரை தெரிந்திடாத சுவாரஸியமான விடயங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தான் ஜான் விஜய். இவர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் டாடி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர். எனவே அவர் குறித்து தான் பார்ப்போம் வாங்க.

துாத்துக்குடி மாவட்டத்தில் 1976 ஆம் ஆண்டு பிறந்த இவர் சென்னையில் தான் வாழ்ந்து வருகின்றார்.இவர் லோயோலோ காலேஜில் படித்ததன் மூலம் தான் சினிமாவில் இணைய வேண்டும் என்று ஆர்வம் கொண்டாராம்.மேலும் படிப்பை முடித்த இவர் முதலில் ஓர் ரேடியோவில் பணியாற்றி வந்தாராம்.


தொடர்ந்து ஒரு விளம்பரக் கம்பெனியில் பணியாற்றிய போது தான் தனது மனைவியைக் காதலித்து வந்தாராம்.பின்னர் இந்த வேலை எல்லாம் சரி வராது நடிப்பு தான் வரும் என்று நடிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாராம்.அதன்படி ஆர்யா நடிப்பில் வெளியான ஓரம் போ படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தாராம்.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் பில்லா படத்திலும் விக்ரமின் ராவணன் படத்திலும் ஜுவா நடிப்பில் உருவான கோ படத்திலும் நடித்தாராம். இவ்வாறாக பல திரை்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு தான் தனது காதலியான மாதவியைத் திருமணம் செய்து கொண்டாராம்.


திருமணம் நடந்த ஆண்டு மௌனகுரு என்னும் படத்தில் வில்லனாக நடித்து பிரபல்யமானாராம்.இது தவிர கலகலப்பு படத்தில் வில்லனாக மாத்திரமல்லாது காமெடியனாகவும் நடித்து அசத்தினாராம்.இப்படியே தன்னுடைய நடிப்பை மெருகூட்டி தான் முக்கிய நடிகராக உயர்ந்தாராம்.


பின்னர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்திலும் விஷாலின் துப்பறிவாளன் படத்திலும் நடித்திருக்கின்றாராம்.இது தவிர மிஸ்டர் லோக்கல் பூமி சார்பாட்டா பரம்பரை என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் தனது விடா முயற்சியினாலும் கடின உழைப்பினாலுமே சிறந்த அடையாளத்தைப் பெற்ற நடிகராக வலம் வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement