• Jan 18 2025

யார் இந்த மாளவிகா.. இவர் பிரபல வில்லன் நடிகரின் மனைவியா.. இதோ வெளிவராத பல உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உழைப்பை மூலதனமாக கொண்டு சினிமாவில் சாதித்த ஒருவரே நடிகை மாளவிகா அவினாஷ். இவர் கேஜிஎப் 1 இல் கம்பீரமான நடை, ஆளுமையான குரல் கொண்ட ஒரு ஊடகவியலாளராக நடித்திருக்கின்றார். இந்நிலையில் இவர் தொடர்பான பல விடயங்களை தொகுத்து நோக்குவோம். 

இவர் 1976 இல் ஜனவரி 28 இல் பிறந்தார். இவர் தமிழ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ஆவார். அப்பா பெயர் கணேசன். இவர் ஒரு  வங்கி ஊழியராகப் பணிபுரிகின்றார். அதுமட்டுமல்லாது இவர் ஒரு பிரபல எழுத்தாளரும் கூட. அதேபோல்  இவரின் அம்மா பெயர் சாவித்திரி. இவர் ஒரு பிரபல பாடகி. அத்தோடு கிளாசிக்கல் டான்ஸராகவும் இருந்துள்ளார்.


அம்மாவைப் போலவே நடிகை மாளவிகாவிற்கும் டான்ஸ் மேல் அலாதி பிரியம் உண்டு. இந்தப் பரத நாட்டியமே இவருக்கு சினிமாவில் ஒரு அடித்தளத்தையும் இட்டுக் கொடுத்தது. இவர் 5வயசிலிருந்தே கலை மேல் இருக்கின்ற ஆர்வத்தினாலும், ஈடுபாட்டினாலும் முன்னோக்கி அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கினார்.

அந்தவகையில் எம்ஆர் என்று சொல்லப்படுகின்ற அப்போதைய பரத நாட்டியக் கலைஞரிடம் தன்னுடைய பரத நாட்டியத்தைக் கற்றுக்கொண்ட மாளவிகா, பத்மஸ்ரீ சாம்சனிடம் அடுத்தகட்ட பயிற்சியைக் கற்றுக் கொண்டார். 


இதனைத் தொடர்ந்து இவர் தனது 9வயதில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். மாளவிகாவைப் பார்த்த கன்னட சினிமாத் துறையை சார்ந்த கணபதி வெங்கட் ரமண ஐயர் தான் இயக்கிய கிருஷ்ண அவதாரம் என்ற படத்தில் மாளவிகாவை கிருஷ்ணராகவே நடிக்க வைத்தார். 

இவர் நடிப்பில் மட்டுமல்லாது படிப்பிலும் சிறந்து விளங்கி இருக்கின்றார். அந்தவகையில் பெங்களூர் பல்கலைக்கழகம் ஒன்றில் Bachlor of Law Degree முடித்திருக்கின்றார். அதில் இவர் 3ஆவது இடத்தை பிடித்திருக்கின்றார். 

1998 இல் வெளியான 'மாயம் ரூகா' என்ற மலையாள சீரியலில் தன்னுடைய முழு நடிப்பினைக் காண்பித்திருக்கின்றார் மாளவிகா. அதற்கு முன்னாடி மாளவிகா என்று இருந்த இவரின் பெயர் இதற்குப் பின்னர் மாளவிகா அவினாஷ் என மாறத் தொடங்கியது.


அதாவது இந்த சீரியலில் தான் இவருக்கு பிரபல வில்லன் நடிகரான அவினாஷுடன் இணைந்து நடிக்கின்ற சான்ஸ் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து 2001 இல் திருமணம் செய்து கொண்டனர்.


பின்னர் இயக்குநர் கே.பாலச்சந்தர் 'அண்ணி' என்ற சீரியல் வாயிலாக மாளவிகாவை தமிழிற்கு கொண்டு வந்தார். இதன் பின்பு 'ராஜராஜேஸ்வரி' சீரியல் வாயிலாக தமிழ் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடத்தினைப் பிடித்துக் கொண்டார்.

நடிப்பினைத் தொடர்ந்து மாளவிகா அரசியலிலும் குதித்தார். அதாவது 2013 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். இணைந்து 6மாதத்தில் இக் கட்சிக்காக 21தொகுதிகளில் பிரச்சாரம் பண்ணியிருக்கார். 2014 இல் இக்கட்சியின் இணை செய்தி ஒளிபரப்பாளரானார். 

இவர் சமுதாயத்திற்காகவும் பல நல்ல விடயங்களை செய்திருக்கின்றார். அந்தவகையில் 'மதியம் அறக்கட்டளை" மூலமாக மக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது இவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கியிருக்கின்றார். இவ்வாறு சாதிக்கத் துடிக்கும் பல பெண்களுக்கு உதாரணமாக இருந்து வருகின்றார் மாளவிகா.

Advertisement

Advertisement