• Apr 05 2025

‘இட்லி கடை’ படத்தின் வெளியீட்டு திகதி எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட தகவல்!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இப்பொழுது வெற்றிகரமான இயக்குநராகவும் உள்ள தனுஷ், தனது அடுத்த படைப்பான ‘இட்லி கடை’ என்ற புதிய திரைப்படத்துடன் திரையுலகை கலக்கத் தயாராகியுள்ளார். ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் வைத்துள்ள இப்படம், வருகின்ற அக்டோபர் மாதம் 1ம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள தனுஷ், இப்படத்தின் மூலம் மீண்டும் தனது தனித்துவமான கதை சொல்லும் திறமையை நிரூபிக்கப் போவதாக சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். 



இப்படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான டான் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. இதில் தனுஷ் தனது படைப்பாற்றலை முழுமையாகக் கொண்டு வந்து இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் வேலையில்லா பட்டதாரி, அசுரன் போன்ற படங்களில் தனுஷின் நடிப்பைப் பார்த்த ரசிகர்கள், இப்பொழுது இவர் இயக்கிய இந்தப் படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிமையான விருந்தாக இருக்கின்றது. தனுஷின் இயற்கையான நடிப்பு , அருண் விஜயின் வில்லன் கதாப்பாத்திரம் மற்றும் நித்யா மேனன் போன்ற சக்தி வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பும் சேர்ந்து இப்படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

Advertisement

Advertisement