தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், தனித்துவமான நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், கடந்த பத்தாண்டுகளில் ரசிகர்களின் மனதில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருந்தார். அவரது இசையால் பல இளைஞரின் இதயம் உல்லாசமாகும். இதைப் போலவே அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது.
எனினும் சமீபத்தில் அவர் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து வெளியிட்ட அறிவிப்பு, தமிழ் சினிமா உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது, ஜி.வி. பிரகாஷ் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி, காதலித்து 2013ம் ஆண்டு திருமணமானார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, இசை ரசிகர்களிடமும் இவரது காதல் திருமணம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இருவரும் பல வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். எனினும் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை நிரூபிக்கும் வகையில் தற்பொழுது தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவலின் படி செப்டம்பர் 25 திகதி வரை இவர்களின் விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அன்று இவ்விசாரணை முடிவுக்கு வரும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!