தமிழ் சின்னத்திரை உலகில் முக்கிய இடம் பிடித்த நடிகர் ஐயப்பன் உன்னி தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான "கயல்" சீரியலில் கதாநாயகி கயலின் அண்ணனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஐயப்பன் தனது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளால் தற்போது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
கனா காணும் காலங்கள் போன்ற பிரபல்யமான சீரியல்களில் நடித்த ஐயப்பன், சின்னத்திரை ரசிகர்களிடையே தனித்துவமான பெயர் பெற்றவர். ஆனால், இவரது மனைவி பிந்தியா சமீபத்தில் வெளிப்படையாக கூறிய குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிந்தியா கூறுவதாவது, "கயல் சீரியல் ஆரம்பித்த பிறகு, ஐயப்பனின் நடத்தை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவரால் பிள்ளையை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவர் சைக்கோ போல நடந்துகொள்கிறார்" என்றார். இதன் காரணமாக, கடந்த மாதம் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில், ஐயப்பன் மீது அதிகாரப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளார் பிந்தியா.
மேலும் "ஐயப்பன் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போடுகின்றார். கடுமையான வார்த்தைகள் பேசுகின்றார். சில சமயங்களில் அவருடைய நடத்தை மிகவும் கொடூரமாக இருக்கின்றது" எனவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தற்பொழுது சீரியல் மற்றும் சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சீரியல் ரசிகர்கள், இந்த விவகாரத்தால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் சமூக ஊடகங்களில் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!