• Jun 30 2024

மூணு மாசத்துல இந்திரஜா சொன்ன குட் நியூஸ்.. ஆனாலும் ட்விஸ்ட் இருக்கு? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இவரது திருமணத்தில் தமிழ் திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் பங்கு பற்றி மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜிதா விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அதில் பாண்டியம்மா என்ற இவரது கேரக்டர் பலராலும் ரசிக்கப்பட்டது. அதற்குப் பிறகு படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திரஜிதாவுக்கும் அவரது தாய் மாமனுக்கும் திருமணம் நடைபெற்றது.


இந்த நிலையில், தற்போது திருமணம் ஆகி மூன்று மாதங்களைக் கடந்த இந்த ஜோடி, குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

அதாவது விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாக உள்ள மிஸ்டர் அண்ட் மிசிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இந்திரஜிதா - கார்த்திக் ஜோடி கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement