• May 21 2025

நான் படத்திற்காக காத்திருக்கிறேன்...ஆனா யாருமே கூப்பிடல..! – சூரியின் பகீர் தகவல்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராகவும், தற்பொழுது முக்கிய கதாநாயகனாகவும் திகழ்கின்றவர் தான் சூரி. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அவர், தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். நிகழ்ச்சி முழுவதும் தனது அழகான பேச்சுத் திறமையால் ரசிகர்களை கவர்ந்த சூரி, சில உண்மையான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.

நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், சூரி தனது 'விடுதலை' பட அனுபவம் குறித்துப் பேசியிருந்தார். அதன் போது அவர் கூறியதாவது, "விடுதலை படம் முடிந்தவுடன், வெற்றி அண்ணன் என்னைப் பார்த்து, ‘சூரி நீ இனிமேல் காமெடி படங்களில் நடிக்கவே கூடாது..!’ என்று சொன்னார். ஆனால் அதற்கு முன்பு, எப்போதும் அவர் என்னை உற்சாகப்படுத்தி, 'வருஷத்துக்கு ஒரு காமெடி படம் என்றாலும் பண்ணணும்' என்று சொல்லியிருந்தார்." என வெற்றி மாறன் உடனான உறவு குறித்து சூரி உருக்கமாகப் பேசினார். 


வெற்றி மான் சூரியின் திறமையைப் பார்த்த பிறகு, அவரை ஒரு முழுமையான நடிகராக உருவாக்க வேண்டும் என்ற ஆசையாலேயே இப்படி கூறியதாகவும் சூரி தெரிவித்திருந்தார். விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரிக்கு கதாநாயகனாக பல வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், "நானும் பாக்கிறேன் ஒரு காமெடி ரோல் வந்தாலும் நடிக்கலாம் என்று. ஆனா யாருமே அந்த ரோலுக்கு கூப்பிடல. எல்லாருமே, சீரியஸான ரோல் தான் உன்னால் செய்ய முடியும்' என்ற மாதிரி பார்க்கிறாங்க." என்றார் சூரி.


Advertisement

Advertisement